ADDED : மே 06, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அயோத்தி ராமர் கோவிலில், கவர்னர் ரவி தன் மனைவியுடன் தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் ரவி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து, தன் மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவிற்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற அவர், பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அயோத்தியில் இருந்து நேற்று இரவு விமானத்தில், அவர் சென்னை திரும்பினார்.