ADDED : ஏப் 01, 2024 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: தமிழக கவர்னர் ரவி, ஐந்து நாள் பயணமாக, நேற்று முன்தினம் மாலை ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். நேற்று மதியம் முதுமலை வந்து, வனத்துறை வாகனத்தில் வனப்பகுதியில் சுற்றிப்பார்த்தார்.
பின், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து, 6:15 மணிக்கு வளர்ப்பு யானைகளுக்கு உணவு வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு வந்த கவர்னர், யானைகளுக்கு உணவு வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த யானைகளுக்கு, பாகன்கள் உணவு கொடுப்பதை பார்வையிட்டு, அவற்றின் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

