ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி உதகைக்கு வருகை
ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி உதகைக்கு வருகை
ADDED : மார் 30, 2024 07:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி:தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை புரிந்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை புரிந்த நிலையில், அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் கோத்தகிரி மலைப்பாதை வழியாக உதகைக்கு வந்தடைந்தார்.
உதகை ராஜ்பவனில் தங்கும் அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
கவர்னர் நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தயொட்டி நீலகிரி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

