ADDED : ஆக 21, 2024 09:08 AM
சிவகங்கை,: தமிழகத்தில் காய்கறி தோட்டம், சோலார் பேனல் வாயிலாக மின்வசதி பெறுதல் போன்றவற்றை செயல்படுத்தியதில் சிறந்த, 26 அரசு பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில், 'பசுமை பள்ளி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுற்றுச்சுழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது. 2023- - 2024ம் ஆண்டில் பசுமை சக்தியை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளியில், 'சோலார் பவர் பிளான்ட் 'அமைத்தல், குடிநீர் மின் மோட்டார்களை சோலார் பிளான்ட் வாயிலாக இயக்குதல்.
பள்ளி வளாகத்தில் சிறிய வனக்காடு உருவாக்குதல், இயற்கை உரங்களை பயன்படுத்தி, பள்ளி வளாகத்தில் காய்கறி மற்றும் மூலிகை தோட்டம் அமைத்தல் மழைநீர் சேகரிப்பு, உள்ளிட்ட காரணங்களுக்காக, 'பசுமை பள்ளி விருது' மாநில வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு தமிழகத்தில், 26 பள்ளிகளுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது.
இவ்விருது வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா, 20 லட்சம் ரூபாய் வீதம் வழங்க, வனத்துறை 5.20 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது.