ADDED : ஆக 14, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மத்திய அரசு எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளது. இதனால், 25 கிலோவுக்கு மேல் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு தானியங்களுக்கும், 5 சதவீத ஜி.எஸ்.டி., அமலாகும் வாய்ப்புள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், மாவட்ட வாரியாக வணிகவரி ஆலோசனை குழு கூட்டத்தை நடத்துவது, ஜி.எஸ்.டி., வரி நிலுவை தொடர்பாக எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனி சமாதான் திட்டத்தை அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வணிகர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னை குறித்து பேச்சு நடத்த, வரும் 16ம் தேதி, சென்னை எழிலகத்தில் உள்ள அலுவலகம் வருமாறு, முக்கிய சங்கங்களுக்கு, தமிழக வணிக வரித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

