மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
ADDED : ஏப் 28, 2024 11:20 PM

துாத்துக்குடி : கிறிஸ்தவ மாதத்திற்கு மாறினால் ரூ. 10 கோடி தருவதாக கூறி கோவில்பட்டியை சேர்ந்த நபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்த தஞ்சாவூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு ஐஎம்ஓ ஆப் மூலம் சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து ஒருவர் பேசினார்.
ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறினார். அந்த பணத்தை பெறுவதற்கு அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வருமான வரி செலுத்த வேண்டும் என கூறி அதற்காக ரூ. 5 லட்சம் கேட்டார்.
கோவில்பட்டி வாலிபரும், ரூ.10 கோடி கிடைக்கிறதே என்ற ஆசையில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாயை, ஜீ பே மூலம் செலுத்தினார்.
பின்னர் போன் செய்தும் பதில் அளிக்காததால் அதனை மோசடி என அறிந்து கொண்டார். தேசிய சைபர் கிரைம் போலீஸ் தளத்தில் புகார் செய்தார்.
தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.
தஞ்சாவூர், ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகரை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் ராஜவேல் 31, பண மோசடி செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

