தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
UPDATED : ஏப் 06, 2024 03:38 PM
ADDED : ஏப் 06, 2024 03:03 PM

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும்(ஏப்ரல் 06), நாளையும் (ஏப்ரல் 07) வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

