ADDED : ஜூன் 29, 2024 07:09 PM
சென்னை:டில்லியில் பெய்த கனமழை காரணமாக, சென்னை - டில்லி - சென்னை இடையே இயக்கப்படும், 16 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.
டில்லியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, டில்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கூரை உடைந்து விபத்துக்குள்ளானது. விமான நிலைய ஒடுதளத்திலும் மழைநீர் புகுந்து இருப்பதால், நேற்று வரை உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, சென்னை - டில்லி - சென்னை இடையே தினசரி இயக்கப்படும், சில விமான சேவைகள், இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்படும் ஏழு விமானங்கள், டில்லியில் இருந்து சென்னைக்கு வரும் ஒன்பது விமானங்கள் என, 16 விமானங்களின் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணியர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

