தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 14 மாவட்டங்களில் இன்று கன மழை

14 மாவட்டங்களில் இன்று கன மழை

14 மாவட்டங்களில் இன்று கன மழை


ADDED : ஜூன் 02, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2024 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் இன்று, 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தென்மாவட்ட பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 5ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 4 செ.மீ., பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், திருச்சி மாவட்டம் சிறுகமணி ஆகிய இடங்களில், தலா 3 செ.மீ., மழை பதிவானது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை


இன்று முதல் 4ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென்மாவட்ட கடலோர பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு, 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசலாம். தெற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்ப நிலை குறையும்!

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், 42.3 டிகிரி செல்ஷியஸ், அதாவது 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலுாரில் 42; சென்னை மீனம்பாக்கம், 40.2; தஞ்சாவூர் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. கரூர் பரமத்தி, மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய நகரங்களில் வெப்பம், 100 டிகிரியை தாண்டியது.இன்று முதல் 5ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வெப்ப நிலை ஒன்று முதல் மூன்று டிகிரி செல்ஷியஸ் குறைந்து, இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us