தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை

எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை

எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை


ADDED : ஜூன் 07, 2024 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2024 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய, எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில், 200 இடங்களில் 1 முதல், 9 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள்; ஆந்திர கடலோரம், மத்திய, தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள்; கேரள, கர்நாடக கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிளில், வரும், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us