அதி கனமழை எச்சரிக்கை 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு
அதி கனமழை எச்சரிக்கை 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு
UPDATED : மே 16, 2024 01:41 AM
ADDED : மே 16, 2024 01:39 AM
சென்னை:வரும் 19ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்பதால், அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம்.
திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங் களுக்கு, கன மழை குறித்து வானிலை மையம் அறிக்கை அளித்து உள்ளது.
இன்று முதல் வரும் 19 வரை இம்மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி; 19ல் தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
கனமழையால் அவசர நிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராக இருக்க வேண்டும்.
விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், உடனே தெரியப்படுத்த வேண்டும் என, கலெக்டர்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
5 நகரங்களில் வெயில் சதம்!
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி,
ஈரோடு, கரூர் பரமத்தி, திருத்தணி, வேலுார் ஆகிய நகரங்களில், அதிகபட்சமாக,
102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம்
பதிவானது.
நாமக்கல் பகுதியில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38
டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.