தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை


ADDED : ஜூன் 27, 2024 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2024 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, சின்னக்கல்லாரில், 20 செ.மீ., மழை பெய்துள்ளது. தேவாலா, 19; கூடலுார் பஜார், சின்கோனா, 15; வால்பாறை, மேல் கூடலுார், 14; பந்தலுார், சோலையார், 12; அவலாஞ்சி, வால்பாறை, 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

இன்று, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யும். மற்ற இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.

தமிழகம், புதுச்சேரியில், ஜூலை 2 வரை மிதமான மழை பெய்யும். வரும் 30ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பு அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். மாலை, இரவு வேளைகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நேற்று மாலை நிலவரப்படி, தொண்டி, பரங்கிப்பேட்டையில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. துாத்துக்குடி, 36; சென்னை, நாகை, 35; மதுரை, 34; புதுச்சேரி, 32; கோவை, 29; கொடைக்கானல், 19 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us