கோவையில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெள்ளம்
கோவையில் கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் வெள்ளம்
ADDED : மே 18, 2024 07:44 PM

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று கோவையில் கனமழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இதனால், சில இடங்களில் வெள்ளம் போல மழைநீர் தேங்கியுள்ளது.கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது கன மழை பெய்கிறது. கோவையில் காந்திபுரம், பீளமேடு, குனியமுத்தூர், கோவையில் இடையர்பாளையம், பேரூர், கோவைப் புதூர், சாடிவயல், ஆலாந்துறை, கவுண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், தடாகம் ரோடு,காருண்யா நகர்,கவுண்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பைக் பார்க்கிங் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

