sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே': உயர் நீதிமன்றம்

/

'ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே': உயர் நீதிமன்றம்

'ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே': உயர் நீதிமன்றம்

'ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே': உயர் நீதிமன்றம்

22


UPDATED : ஜூன் 13, 2024 04:53 AM

ADDED : ஜூன் 13, 2024 02:29 AM

Google News

UPDATED : ஜூன் 13, 2024 04:53 AM ADDED : ஜூன் 13, 2024 02:29 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'கிராம கோவில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை, நீர்நிலைகளை துார்வாருதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை உட்பட தென் மாவட்டங்களில், பல்வேறு கிராம கோவில்களில் திருவிழாக்களையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க, போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்குகள் தாக்கலாகின.

நீதிபதி பி.புகழேந்தி: தற்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி எல்லா கோவில் திருவிழாக்களிலும் பொதுவானதாகிவிட்டது. இது ஒரு கலாசார வளர்ச்சியாகத் தோன்றுகிறது.

திரைப்பட பாடல்களை இசைத்து, அதற்கேற்ப ஆண்கள், பெண்கள் வண்ணமயமான உடையில் மேடையில் நடனமாடுகின்றனர். இசைக்கப்படும் பாடல்களில் பெரும்பாலானவை ஆபாசமான, இரட்டை அர்த்தத்தில், பாலுணர்வை துாண்டும் வகையில் உள்ளதாக அரசு தரப்பு கூறியது. இந்த ஆட்சேபனைகளை முற்றிலும் மறுக்க முடியாது.

தமிழகம் பல கலைகள், கலாசாரங்களை கொண்ட செழுமையான பாரம்பரியம் கொண்ட மாநிலம். ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான கலை, கலாசாரத்தை கொண்டுள்ளது. இருப்பினும், இளைஞர்கள் அக்கலைகளில் ஆர்வம் செலுத்தாமல், சினிமா பாடல்களை விரும்புகின்றனர்.

ஆபாசமாக நடனமாடுவது தடை செய்யப்பட்ட ஒன்று. இது முன் 'ரிக்கார்டு டான்ஸ்' என அழைக்கப்பட்டது. பின் அது 'காபரே' நடனமாக வளர்ந்தது. தற்போது அத்தகைய நடனம் கிராம திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.

கஜா புயலால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆடல், படல் நிகழ்ச்சி நடத்துவதற்காக வசூலித்த பொதுப் பணத்தை, சில இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து தங்கள் கிராம நீர்நிலைகளை துார்வார பயன்படுத்தினர்; அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

இதை அறிந்த பல தன்னார்வலர்கள், பிற கிராம மக்கள் மற்றும் பல அமைப்புகள் தானாக முன்வந்து, தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதுவரை அவர்கள் பல மாவட்டங்களில் 200 நீர்நிலைகளை துார்வாரி உள்ளனர்.

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள் அரைகுறை ஆடைகள் அல்லது ஆபாச நடன அசைவுகளை பயன்படுத்தமாட்டர்.

இரட்டை அர்த்த பாடல்கள் அல்லது வசனங்கள் அல்லது ஜாதி, மதம் அல்லது அரசியல் வசனங்கள் இடம்பெறாது என்பன உள்ளிட்ட உத்தரவாதத்தை மனுதாரர்கள் போலீசாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us