நெடுஞ்சாலைத்துறை ரோடு, பால திட்ட மதிப்பீடை தமிழில் தயாரிக்க எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலைத்துறை ரோடு, பால திட்ட மதிப்பீடை தமிழில் தயாரிக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 15, 2025 02:35 AM
விருதுநகர்:தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோடு, பால திட்ட மதிப்பீடுகளை தமிழில் தயாரிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பாலங்கள், ரோடுகளுக்கான திட்ட மதிப்பீடுகள் ஆங்கிலத்தில் உள்ளது. இதை 'பாலிசிநோட்டு' என்பர். இந்த திட்டங்களுக்கான திட்ட மதிப்பீடுகளை பொறியாளர்கள், இந்த ரோடு போட என்ன தேவை உள்ளது, எதற்காக இந்த இடத்தில் பாலம் வர வேண்டும் என ஆங்கிலத்தில் சிறப்பு அறிக்கையாகவும், அதன் தொடர்ச்சியாக திட்டமதிப்பீடாகவும் தயாரிக்க வேண்டும். இதை தமிழில் எழுத அனுமதிப்பதில்லை.
தமிழில் இருந்தால் பாமர மக்கள் புரிந்துக் கொள்ள முடியும், பணிகளில் வெளிப்படை தன்மை இருக்கும். இப்போது ஆங்கில அறிவு உள்ளவர் மட்டும் தான் திட்ட மதிப்பீடுகளை வாசிக்க முடியும்.
திட்ட மதிப்பீடுகளை தமிழில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து துறை தலைமைக்கு கடிதம் எழுதினர். தமிழில் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு 2023ல் அரசு சார்பு செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை திட்ட மதிப்பீடுகளை தமிழில் உருவாக்க வேண்டும் என பட்டய பொறியாளர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.