தெற்கில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும்: ஸ்டாலின்
தெற்கில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும்: ஸ்டாலின்
ADDED : ஜூலை 22, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
தடைகளை கடந்து தரவுகளை சேகரிக்கிறோம். மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள், தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரை காசு, சிவப்பு வண்ண கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர் கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை காய், சுடுமண் சிற்பம், உணவு கிண்ணம், செம்பில் செய்யப்பட்ட அஞ்சனக்கோல், ஆணி என, அகழாய்வுகளில் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
தமிழரின் வரலாற்றையும், பண்பாண்டையும், அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம், சரியான திசையில் செல்வதை, இது உறுதி செய்கிறது.
இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

