ADDED : மார் 03, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தில், விருதுநகர் மாவட்டத்துக்கு விடுமுறை அளித்து, மதுக்கடைகளை மூட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சமூகத்தில் ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவம், சமாதானம் நிலவ வேண்டும் என்பதை போதித்த, அய்யா வைகுண்டரின், 193வது அவதார தினம், நாளை கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், அன்பையும், ஆன்மிகத்தையும், வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.