ADDED : பிப் 27, 2025 12:13 AM
சென்னை:கோடை வெயிலால் ஏற்படும் வெப்ப வாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் கூறியதாவது:
கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்டுகள் அதிகளவில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓ.ஆர்.எஸ்., என்ற உப்பு சர்க்கரை கரைசல் வினியோக வசதியும் ஏற்படுத்த கூறியுள்ளோம்.
மேலும், மருத்துவமனைகளில் குடிநீர் வசதிகள், 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்பவாத பாதிப்புக்கு துரித சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளோம்.
மருந்துகள், தடுப்பூசிகளை குறைந்த தட்பவெப்ப நிலையில் சேமிக்கவும், வெப்ப அலை பாதிப்பு கள் தொடர்பான விபரங்களை அளிக்கவும், அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

