பஸ்சில் ஜாதி பாடல் ஒலித்தால் கைது: டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
பஸ்சில் ஜாதி பாடல் ஒலித்தால் கைது: டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 17, 2024 01:17 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மாணவர்களிடையே அடிக்கடி ஜாதி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.  மாவட்டத்தில், சில தினங்களில், 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் சேரன்மகாதேவி அருகே, மனோ பல்கலை கல்லுாரி மாணவர்கள் மொபைல் போனில், 'ஆன்லைன் கேம்' விளையாடிய போது, அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மாவட்டங்களில் மாணவர்களிடம் ஜாதிய மோதல்கள் அதிகரித்து வருவதால், அதை தடுப்பது குறித்து போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பயணிக்கும் தனியார் பஸ்களில், சில சமுதாயப் பாடல்கள், ஜாதியை மையப்படுத்தும் சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்து, ஜாதி உணர்வை துாண்டுவது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுடன் நெல்லையில் நேற்று நடத்திய ஆலோசனையின் போது, மாணவர்களிடையே நடக்கும் மோதல் குறித்த தகவல்களை உடனுக்குடன் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்.
பஸ்களில் ஜாதி பாடல்களை ஒலிபரப்பக் கூடாது, மீறி ஒலிக்கச் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.

