நெடுஞ்சாலை ஆணையம் அமைந்தால் பஸ் கட்டணம், சுங்கவரி கட்டணும் சொல்கிறார் சாலைப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர்
நெடுஞ்சாலை ஆணையம் அமைந்தால் பஸ் கட்டணம், சுங்கவரி கட்டணும் சொல்கிறார் சாலைப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர்
ADDED : செப் 18, 2024 01:28 AM
திண்டுக்கல்:''மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டால் பஸ் கட்டணத்தோடு சுங்கவரியும் கட்டும் நிலை ஏற்படும் '' என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் அம்சராஜ் கூறினார்
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அரசின் தனியார் மயக்கொள்கை காரணமாக 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கும் பாதிப்பு உள்ளது. தமிழக அரசின் சார்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் பஸ் கட்டணத்தோடு சுங்கவரியும் கட்ட நேரிடும். ஆணையம் அமைவதால் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிரந்தரப்பணியிடங்கள் ஒழிக்கப்படுவதோடு கிராம இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் மறுக்கப்படும் என்றார்.
மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. கோரிக்கைகளை வென்றெடுக்க மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார்.

