'மொபைல் போனில் அழைத்தால் இம்காப்ஸ் மருந்து வீடு தேடி வரும்'
'மொபைல் போனில் அழைத்தால் இம்காப்ஸ் மருந்து வீடு தேடி வரும்'
ADDED : செப் 12, 2024 11:28 PM

சென்னை:“மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டால், இம்ப்காப்ஸ் நிறுவன மருந்துகள் வீடு தேடி வரும்,” என, அந்நிறுவனத்தின் தலைவர் கண்ணன் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள, 'இம்ப்காப்ஸ்' நிறுவனத்தின் 80வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
இதில், அந்நிறுவன தலைவர் கண்ணன் பேசியதாவது:
கடந்த 2017 வரை, இம்ப்காப்ஸ் ஆண்டு வருவாய் 38 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 60 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், படிப்படியாக அதிகரித்து, 2027க்குள் 100 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டுள்ளோம்.
இதன் வாயிலாக, இம்ப்காப்ஸ் மருத்துவ கல்லுாரி துவங்குவதுடன், நிறுவனத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகளுக்கான கல்வி கூடத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இம்ப்காப்ஸ் நிறுவன மருந்துகளுக்கு அனைத்து தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. 97101 05678; 97102 05678 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டால், இம்காப்ஸ் தயாரிப்பு மருத்துகள், வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படும்.
மேலும், 5,000 ரூபாய்க்கு மேல் மருந்துகள் வாங்குபவர்களுக்கு, போக்குவரத்து செலவுக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி பேசுகையில், “இம்ப்காப்ஸ் நிறுவன மருந்துகளை பயன்படுத்து வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
“கொரோனா போன்ற காலகட்டங்கள் துவங்கி தற்போது வரை, அரசின் டாம்கால் நிறுவனத்தில் போதிய மருந்துகள் இல்லாத நேரங்களில், இம்ப்காப்ஸ் நிறுவன மருந்துகளை வாங்குகிறோம்,” என்றார்.

