புதிய 'ஆன்லைன்' படிப்புகள் அறிமுகம் செய்கிறது ஐ.ஐ.டி.,
புதிய 'ஆன்லைன்' படிப்புகள் அறிமுகம் செய்கிறது ஐ.ஐ.டி.,
ADDED : மார் 08, 2025 12:21 AM
சென்னை:மாணவர்கள் படித்ததும் வேலைவாய்ப்பை பெறும் வகையில், தொழில் நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும் இணைத்து, புதிய, 'ஆன்லைன்' படிப்புகளை நடத்தும் பணியில், சென்னை ஐ.ஐ.டி., ஈடுபட்டுள்ளது.
தொழில் துறையினர் எதிர்பார்க்கும் தகுதிகளை, மாணவர்களுக்கு வழங்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 'ஸ்வயம் பிளஸ்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில், சத்தியபாமா பல்கலை, தியாகராஜர் கலை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, ஸ்ரீ வெங்கடேஷ்வரா பல்கலை, விநாயகா மிஷன் சட்டப்பள்ளி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துஉள்ளன.
முதல் கட்டமாக, 2,500 மாணவர்களுக்கு, 35 வகையான படிப்புகளை ஆன்லைன் வாயிலாக நடத்த, சென்னை ஐ.ஐ.டி., திட்டமிட்டுள்ளது.
விரைவில், 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.