இ-பாஸ் முறை அமல்: தமிழக கேரளா எல்லையில் சோதனைக்கு பின், வாகனங்கள் அனுமதி
இ-பாஸ் முறை அமல்: தமிழக கேரளா எல்லையில் சோதனைக்கு பின், வாகனங்கள் அனுமதி
ADDED : மே 07, 2024 09:06 AM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ளது. இதனால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. குறுகிய நகரமான ஊட்டி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை, வாகனங்கள் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வர அனுமதி வழங்கப்படுகிறது.
'நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்து எவ்விதமான தடையும் இல்லை. முறையாக இ-பாஸ் பெரும் அனைத்து வாகனங்களும் நீலகிரிக்கு வரலாம்' என, நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார். அதன்படி இன்று காலை முதல், நீலகிரி மாவட்டத்திற்கு நுழையும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக நீலகிரி மாவட்ட எல்லை மற்றும் கூடலூரை ஒட்டிய தமிழக - கேரளா, தமிழக - கர்நாடகா எல்லைகளில் வருவாய்த்துறையினர் மற்றும் மகளிர் சுய உதவி குழு அடங்கிக் குழுக்கள், நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து, இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.