143 முருகன் கோயில்களில் ரூ. 50 கோடியில் திருப்பணிகள் மாநாட்டில் தீர்மானம்
143 முருகன் கோயில்களில் ரூ. 50 கோடியில் திருப்பணிகள் மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஆக 25, 2024 08:42 PM

பழனி : 143 முருகன் கோயில்களில் ரூ. 50 கோடியில் திருப்பணிகள் துவங்கப்படும் எனபழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ்முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து விபரம் வருமாறு:
முதற்கட்டமாக143 முருகன் கோயில்களில் ரூ. 50 கோடியில் திருப்பணிகள் துவங்கப்படும்.
அர்ச்சகர்கள் ஓதுவார்கள் உள்ளிட்டோரை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 பேருக்கு விருது வழங்குவது
அனைத்துலக முத்தமிழ்முருகன் மாநாடு நினைவாக பழனியில் வேல் நிறுவுவது என்பது
முத்தமிழ்முருகன் ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வது
அறுபடை வீடுகளுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை ஆயிரத்தில் இருந்துஐ 1,500 ஆக உயர்த்துவது .
திருக்கோயில்களில் தமிழுக்கு முன்னுரிமை அளிப்பது. குடமுழுக்கு தமிழில் நடைபெறும்
என்பன உள்ளிட்ட21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

