ADDED : செப் 16, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் மஹன்யாஸ் ஜவுளிக் கடையின் புதிய ஷோரூம் கீழமாசிவீதி விளக்குத்துாண் அருகே நேற்று திறக்கப்பட்டது.
பட்டு, பேன்ஸிரக சேலைகளுக்கான பிரத்தியேக கடையான மஹன்யாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தி திறந்து வைத்தார். நிர்வாக இயக்குநர் கணேசன், இயக்குநர் சரோஜா, இணை நிர்வாக இயக்குநர் விவேகானந்த் விளக்கேற்றினர். டாக்டர் விஷ்ணு ராஜா, குழந்தைகள் அக் ஷரா, ஆராதனா மற்றும் பலர் உடன் இருந்தனர். வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த எதிரே 'பார்க்கிங்' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.