மலக்குடல் புற்றுநோய் அதிகரிப்பு கோவை மாநாட்டில் தகவல்
மலக்குடல் புற்றுநோய் அதிகரிப்பு கோவை மாநாட்டில் தகவல்
ADDED : மார் 02, 2025 05:53 AM
கோவை,: 'இந்திய காஸ்ட்ரோ என்டராலஜி சங்கம்' தமிழக பிரிவு சார்பில் மூன்று நாள் மாநாடு, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை அரங்கில் துவங்கியது.
இரண்டாம் நாளான நேற்றைய நிகழ்வில், டாக்டர் வெங்கடகிருஷ்ணன் கூறுகையில், ''இரைப்பை குடல் நோய் பாதிப்புகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றன. தற்போது நோய்களை முன்கூட்டியே கண்டறிய, ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவுகிறது.
''சமீப காலங்களில் மலக்குடல் சார்ந்த புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதை காண்கிறோம். இரைப்பை குடல் நோய் பாதிப்புக்கு, சரியான ஊட்டச்சத்து உணவு முறை, உடற்பயிற்சி போன்ற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக, பாதிப்புகளை குறைக்கலாம்,'' என்றார்.
மாநாட்டில், 60 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்திய காஸ்ட்ரோ என்டராலஜி சங்க தமிழக பிரிவு தலைவர் பிரேம்குமார், செயலர் பிரம்மநாயகம், பொருளாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.