முல்லைப்பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 22, 2024 05:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:
கேரள மாநிலம் முல்லைப்பெரியாறு அணையில் தொடரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 523 கன அடியாக அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 17.4 மி.மீ., தேக்கடியில் 7.8 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 418 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 523 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 117.70 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).
தமிழகப்பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக 511 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 2213 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

