ADDED : ஆக 26, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.
திருமாவளவனுக்கு ஏற்கனவே, பி.எஸ்.ஓ., என்ற தனி பாதுகாவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது மேலும் ஒரு பி.எஸ்.ஓ., மற்றும் நான்கு போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

