ADDED : ஏப் 26, 2024 08:57 PM
சென்னை:'கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் வி.வெங்கய்யா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' என, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய தொல்லியல் துறையில், முதல் தலைமை கல்வெட்டு ஆய்வாளராக பணியாற்றி, பல சாதனைகளை செய்தவர் வி.வெங்கய்யா. அவரின் நினைவை போற்றும் வகையில், 2022 முதல், அவரின் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
நாட்டில் கண்டுபிடிக்கப்படாமல், பதிவு செய்யப்படாமல் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து, அதன் வரலாற்றை வெளிப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுவோருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தகுதியுடைய எந்த மொழி கல்வெட்டு ஆய்வாளரும், அடுத்த மாதம், 21ம் தேதிக்குள், awards.tht@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பரிந்துரைக்கலாம்.
மேலும் விபரங்களை, admin@tamilheritage.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 95000 74247 என்ற மொபைல் போன் எண்ணிலோ அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

