நில அபகரிப்பு காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்
நில அபகரிப்பு காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்
ADDED : செப் 09, 2024 06:06 AM
சென்னை: சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள, நுங்கம்பாக்கம் சட்டம் -- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
சென்னை நீலாங்கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த போது, சோழிங்கநல்லுாரில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உடந்தையாக, ஆனந்த்பாபு இருந்தார்; அவர்களுடன் கைகோர்த்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆனந்த்பாபு உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர். இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ள ஆனந்த்பாபுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.