நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை வித்துள்ளனர்.
ஒரு மாதமாக யானை நடமாட்டம், காட்டுத்தீ பரவலால் பேரிஜம் ஏரி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மோயர் சதுக்கம் பேரிஜம் ஏரி செல்லும் தர்கா பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை பேரிஜம் செல்ல தடைவிதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

