ADDED : ஜூலை 11, 2024 02:36 AM
சென்னை:நடிகர் கமல் நடித்து வெளியான 'குணா' படத்தை மறு வெளியீடு செய்ய, பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மலையாளத்தில், 'மஞ்சுமேல் பாய்ஸ்' என்ற படம் வெளியாகி, வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்த படத்தின் காட்சிகள், தமிழில் 1991ல் கமல் நடித்து வெளியான, குணா பட காட்சிகள் போன்று இருந்தன. இதையடுத்து, குணா படம் மறுவெளியீடுசெய்யப்பட்டது.
இதற்கு எதிராக, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு:
குணா படத்தின் பதிப்புரிமையை நான் வாங்கியுள்ளேன். அந்த படத்தை மறு வெளியீடு செய்ய, 'பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா' நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
குணா படத்தின் முழு உரிமைதாரராக என்னை அறிவிக்க வேண்டும்; படத்தை மறுவெளியீட்டில் கிடைத்த வருமானத்தை, எனக்கு வழங்கும்படி, அந்த நிறுவனங்களுக்குஉத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்தும்; மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள், பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டும், விசாரணையைதள்ளி வைத்தார்.

