ADDED : ஜூன் 30, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''கோடநாடு வழக்கு குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நீலகிரி மாவட்டம் கோடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய, எட்டு மொபைல் போன்கள், நான்கு சிம் கார்டுகள், கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவர்களிடம் இருந்து, 8,000 பக்கம் ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளன. எனவே, அதை 'இன்டர்போல்' என்ற, சர்வதேச போலீஸ் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

