ஒரே யு.பி.ஐ., கணக்கை 6 பேர் வரை பயன்படுத்தும் புதிய வசதி அறிமுகம்
ஒரே யு.பி.ஐ., கணக்கை 6 பேர் வரை பயன்படுத்தும் புதிய வசதி அறிமுகம்
ADDED : ஆக 20, 2024 02:47 AM

என்னோட மனைவிக்கு பேங்க் அக்கவுன்ட் இல்லை. இப்போ எல்லா இடத்திலேயும் யு.பி.ஐ., வழியா பணம் செலுத்துறாங்க. நானும் அப்படித்தான். அவங்களும் என்னோட பேங்கிலிருந்து யு.பி.ஐ., வழியா பணம் அனுப்ப முடியுமா?
தாராளமா முடியும். உங்க அக்கவுன்ட்டை பயன்படுத்தி, அவங்க பணம் செலுத்தலாம். அவங்களுக்கு பேங்க் கணக்கு தேவையில்லை. ஒரு போன் இருந்தா போதும்.
?அதுக்கு நான் என்ன செய்யணும்?
பெரிசா ஒண்ணுமில்லை, அவங்க போன்ல ஒரு யு.பி.ஐ., ஐடியை உருவாக்கணும். அது போதும். அது வாயிலா உங்க பேங்க் கணக்குல இருந்து அவங்க பணத்தை பரிவர்த்தனை செய்யலாம்.
?ஒரு நபருக்கு மட்டும்தான் இப்படி பண்ண முடியுமா?
உங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் உங்களுக்கு வேண்டியவர்கள்னு 5 பேர் வரை அனுமதிக்கலாம். நீங்கதான் மெயின்.
?சரி எனக்கு தெரியாம எங்கிட்ட இருக்க பணத்தை எல்லாம் எடுத்து செலவழிச்சிட்டாங்கன்னா?
அப்படி நடக்காது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கத்தான் ரெண்டு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு. முதல் வழி, நீங்க ஒரு குறிப்பிட்ட வரம்ப நிர்ணயிச்சிடலாம். அந்த வரம்பு வரை மட்டுமே அவங்களால செலவு செய்ய முடியும். மற்றொரு வழி, அவங்க செய்யுற செலவு எல்லாத்துக்கும், நீங்க உங்க பின் எண்ணை உள்ளிட்டாதான் அந்த பரிவர்த்தனை நிறைவேறும். இதனால் உங்களுக்கு தெரியாம அவங்களால எந்த செலவும் மேற்கொள்ள முடியாது.
?சரி, அவங்க யு.பி.ஐ., ஐடியை என்னோட ஐடியுடன் எப்படி இணைப்பது ?
நீங்க இணைக்க விரும்புறவங்களோட யு.பி.ஐ., ஐ.டி., அல்லது கியூ.ஆர்.,குறியீடை பயன்படுத்தி, அதனை உங்க கணக்குடன் இணைத்துக்கொள்ளலாம். அதன் பின், அவங்களோட மொபைல் எண்ணை உள்ளிட்டால் போதுமானது.
?ரெண்டு பேரும் ஒரே யு.பி.ஐ., செயலியிலதான் கணக்கு வச்சிருக்கனுமா ?
அப்படி கட்டாயம் இல்ல. வெவ்வேறு செயலியில கூட வச்சிருக்கலாம்.

