துருப்பிடிக்காத டி.எம்.டி., கம்பி சூர்யதேவ் நிறுவனம் அறிமுகம்
துருப்பிடிக்காத டி.எம்.டி., கம்பி சூர்யதேவ் நிறுவனம் அறிமுகம்
ADDED : மே 12, 2024 12:15 AM

சென்னை:சூர்யதேவ் நிறுவனம் துருப்பிடிக்காத, 'எப்.இ., 550டி சி.ஆர்.எஸ்.,' கம்பி களை அறிமுகம் செய்துஉள்ளது.
கட்டுமான துறையில், சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் நிறுவனம், உள்நாட்டில் தரமான டி.எம்.டி., கம்பிகளை குறைந்த விலையில் சந்தையில் வழங்கி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கு தேவையான டி.எம்.டி., கம்பிகளையும் வழங்குகிறது.
சிறந்த தரம்
இந்நிலையில், துருப்பிடிக்காத எப்.இ.550டி சி.ஆர்.எஸ்., - டி.எம்.டி., கம்பிகளை நேற்று சூர்யதேவ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
அதன் நிர்வாக இயக்குனர் முகேஷ் அகர்வால், துணைத்தலைவர் நமன் அகர்வால், பொதுமேலாளர் பாலச்சந்தர், செயல் இயக்குனர் கிருஷ்ணன் மற்றும் மூத்த மேலாளர் யஷ்பால் ஷர்மா ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
பின், நிர்வாக இயக்குனர் முகேஷ் அகர்வால் கூறியதாவது:
டி.எம்.டி., கம்பிகளை கடந்த 15 ஆண்டுகளாக, சிறந்த தரத்தில் வழங்கி வருகிறோம். இதற்கு முன், 550டி போன்ற கம்பிகளை தயாரித்து உள்ளோம்.
கடலோர பகுதிகளில் உப்பு நிறைந்த கடல் காற்றின் தன்மையால், கம்பிகள் எளிதில் துருப்பிடித்து விடும். இதனால், கட்டுமானங்கள் பெரிய அளவில் பாதிக்கும்.
நாங்கள் தயாரித்துள்ள இந்த டி.எம்.டி., கம்பிகள் துருப்பிடிக்காது. உப்புத் தன்மை இருக்கும் இடத்தில்கூட பயன்படுத்தும் அதிக தரத்தினாலானது. பி.ஐ.எஸ்., அங்கீகரித்து உள்ளதால் கட்டுமான துறையினர் நம்பி வாங்கலாம். சந்தையில் பல நிறுவனங்கள் கம்பிகளை தயாரிக்கின்றன.
மாறுபட்டவை
அதில், எங்கள் டி.எம்.டி., கம்பிகள் மாறுபட்டவை. இரும்புகள் மற்றும் இதர மூலப்பொருட்களை தனியாக நாங்கள் தயாரிக்கிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் தயாரிப்பது, எங்களின் கூடுதல் சிறப்பு.
கான்ட்ராக்டர்கள் வாயிலாகவும் மத்திய, மாநில அரசின் உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் டி.எம்.டி., கம்பிகளையும் வழங்கி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள், எங்கள் கம்பிகளை பயன்படுத்தி கட்டமைக்கின்றன. மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.