ADDED : ஏப் 17, 2024 12:43 AM

சென்னை:புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, அரிசோ ஒயர்களை, வி -கார்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான வி- கார்டு, மின் ஒயரிங் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பான, அரிசோ ஒயரை அறிமுகம் செய்துள்ளது.
நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையிலும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தும் மேம்பட்ட மின்-பீம் தொழில்நுட்பத்தில், 99.97 சதவீதம் துாய தாமிரத்துடன், உலக தரத்தில் அரிசோ ஒயர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உறுதியாக, அதே நேரம் நெகிழ்வு தன்மை கொண்டதாக இருப்பதால் பயன்படுத்துவதும் எளிதாகிறது. அரிசோ ஒயர்கள் நச்சு வாயுக்களையும் வெளியிடுவதில்லை. இது, நுகர்வோருக்கு பெரும் மனநிறைவை அளிக்கிறது.
வழக்கமான ஒயர்களுடன் ஒப்பிடும்போது, வி - கார்டு அரிசோ ஒயர்கள், 75 சதவீதம் அதிகமாக மின்சாரத்தை கடத்தும் திறன் கொண்டது. அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதால், அரிசோ ஒயர்களால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக குறைவு.
கரையான்கள், ஈரப்பதத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால் வீடுகள், வணிக நிறுவனங்களின் பாதுகாப்பை, அரிசோ ஒயர்கள் உறுதி செய்கின்றன என்று, வி - கார்டு இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

