இட்லி, தோசைக்கு சிறுதானிய 'மிக்ஸ்' 'ஆசிர்வாத்' அறிமுகம்
இட்லி, தோசைக்கு சிறுதானிய 'மிக்ஸ்' 'ஆசிர்வாத்' அறிமுகம்
ADDED : மே 11, 2024 08:18 PM
சென்னை:தோசை மாவுடன் சிறுதானியம் சேர்த்து ருசி குறையாமல் சத்துள்ள உணவு உட்கொள்ள வழிகாட்டுகிறது, 'ஆசிர்வாத்' நிறுவனம்.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவில் முக்கிய அங்கம் வகித்தன. நம் முன்னோர்களுக்கு அதன் சிறப்பம்சங்கள் நன்றாக தெரிந்திருந்தன.
இப்போது, அதை நாம் அதிகம் உபயோகிப்பது இல்லை. இதை அன்றாட உணவில் சேர்ப்பது கடினமாக உள்ளதோடு, வீட்டில் உள்ள எல்லாருக்கும் ருசியும் பிடிப்பது இல்லை என்று, இல்லத்தரசிகள் தவிர்க்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, ஐ.டி.சி., நிறுவனத்தின் சார்பில், 'ஆசிர்வாத் மில்லட் பேட்டர் மிக்ஸ்' தயாரித்துள்ளோம். இதில், ராகி, கம்பு, சோளம், தினை உள்ளது. வெறும் 15 ரூபாயில் கிடைக்கும்.
இந்த 80 கிராம் பாக்கெட் உடன் மூன்று கப் வழக்கமான இட்லி அல்லது தோசை மாவு கலந்து இட்லி, தோசை தயாரிக்கலாம்.
வழக்கமான இட்லி, தோசையில் சிறு தானியங்களின் நன்மை சேரும். சுவையும் மாறாது. தினசரி உணவில் பாரம்பரிய சிறுதானியங்களை சேர்க்க இது ஒரு சுலபமான வழி.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.