ADDED : ஏப் 19, 2024 10:37 PM
சென்னை:இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, கோடை விடுமுறை கால 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சியை அண்ணா பல்கலை அறிமுகம் செய்துஉள்ளது.
நாடு முழுதும் உள்ள இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பை ஊக்குவிக்க, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக, 'ஸ்கில் இந்தியா' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி, நான் முதல்வன் திட்டத்தில், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு, கோடைக்கால சிறப்பு இன்டெர்ன்ஷிப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, 2 முதல் 4 வாரங்கள் வரை இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம் என, அந்தந்த பாடப்பிரிவின் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வழியே அறிவிக்கப்பட்டுள்ளது.

