ADDED : ஜூலை 09, 2024 12:15 AM
சென்னை : நீரின் தரத்தை அறிவதற்கான படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யும், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலையும், கோவை கே.எம்.சி.ஹெச்., ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து, நீரின் தரம் குறித்த படிப்பை நடத்த உள்ளன. ஆன்லைன் வழியில், நான்கு மாதத்துக்கு, இந்த படிப்பு நடத்தப்படுகிறது. படிப்பு காலம் முடிந்ததும், ஐ.ஐ.டி.,யில் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆன்லைனில் மட்டுமின்றி, நேரிலும் இதற்கான வகுப்புகள் நடத்தப்படும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு, வரும் 29ம் தேதி துவங்க உள்ளது. படிப்பில் சேர விரும்புவோர், https://bit.ly/3zgpkMy என்ற இணையதள இணைப்பில் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப் கூறுகையில், ''அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இந்த படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.

