பாசன வழித்தடங்கள் துார்வாரும் பணி: ரூ.120 கோடி நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு
பாசன வழித்தடங்கள் துார்வாரும் பணி: ரூ.120 கோடி நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு
ADDED : மார் 14, 2025 12:14 AM
சென்னை:நீர்வளத்துறையின் சிறப்பு துார்வாரும் பணிக்கு, முன்கூட்டியே, 120 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, பாசன அமைப்புகளை துார்வார, இரண்டு ஆண்டுகளாக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு முன்கூட்டியே, 120 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கி உள்ளது. இந்நிதியில், 6,179 கி.மீ., பாசன அமைப்புகள் துார்வாரப்பட உள்ளன. மொத்தம், 1,071 பணிகளாக பிரித்து, ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட உள்ளது.
இப்பணிகளை கண்காணிக்க, தொடர்புடைய கிராமங்களில் இருந்து, இரண்டு அல்லது மூன்று விவசாயிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.
இக்குழுவின் பணியை, மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.