ADDED : ஜூலை 12, 2024 10:00 PM
தமிழக அரசு துறைகளில், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள, 10,402 எஸ்.சி., - எஸ்.டி, பின்னடைவு பணியிடங்கள், சிறப்பு ஆள்தேர்வு நடத்தி நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்து மூன்றாண்டுகளாகிறது. ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை.
தமிழகத்தில் சமூக நீதி ஆட்சி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். ஆனாலும், 13 ஆண்டுகளாக 10,402 எஸ்.சி., - எஸ்.டி., பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுதான் தி.மு.க.,வின் சமூக நீதியா? இதில், 7090 பணியிடங்கள், முதல்வர் ஸ்டாலினின் உள்துறை, மதுவிலக்கு துறையில் உள்ளது என்பது வேதனையான உண்மை.
உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவில் இருந்தும் மீண்டிருக்கும். அதை செய்ய தவறியது தி.மு.க.,வின் சமூக அநீதி. சமூக நீதி என்பதை வெற்று வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல், செயலிலும் தி.மு.க., அரசு காட்ட வேண்டும்.
- ராமதாஸ்,
பா.ம.க., நிறுவனர்.
