அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது சட்டவிரோதம்
அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது சட்டவிரோதம்
ADDED : பிப் 27, 2025 07:11 PM

திருவள்ளூரில், தி.மு.க., அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் கலெக்டர், திருவள்ளூர் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் துவங்கப்பட்டது சட்ட விரோதம்; கண்டித்தக்கது.
இரு மொழி கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழி கல்வியை கட்டாயமாக்கும் புதிய கல்வி திட்டத்தை, தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்தி கொண்டிக்கிறது தி.மு.க.,
தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டு உள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்ற போகிறார் முதல்வர்?
- அண்ணாமலை,
தலைவர், தமிழக பா.ஜ.,