பாம்பன் கடலில் ரயில் துாக்கு பாலம் பொருத்த இன்னும் 120 மீ., தான்
பாம்பன் கடலில் ரயில் துாக்கு பாலம் பொருத்த இன்னும் 120 மீ., தான்
ADDED : மே 09, 2024 11:40 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலம் நடுவில் துாக்கு பாலம் பொருத்துவதற்கு இன்னும் 120 மீ., துாரம் உள்ளது.
பாம்பன் கடலில் உள்ள ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் 2022 நவ.23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முழு வீச்சில் நடக்கிறது.
இதில் 1.5 கி.மீ.,க்கு 100 சதவீதம் பணி முடிந்த நிலையில் மீதமுள்ள 500 மீ.,க்கு இரும்பு கர்டர், தண்டவாளம் அமைக்காமல் உள்ளது. பாம்பன் பாலம் கிழக்கு பகுதியில் புதிய துாக்கு பாலம் வடிவமைத்து மார்ச் 12 முதல் நகர்த்தப்பட்டு வருகிறது. 400 மீ., நகர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் 120 மீ., துாரமே உள்ளது.
இதுவும் மே 20க்குள் முடிய வாய்ப்பு உள்ளது. இதன் பின் துாக்கு பாலத்தை பொருத்தி சரிபார்க்கும் பணி இரு மாதம் வரை நீடிக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.