ADDED : ஏப் 02, 2024 02:37 AM

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராக இருப்பவர் கிரி. அவரது வீடு, அணிக்கடவு ராமச்சந்திராபுரத்தில் உள்ளது.
இங்கு, தேர்தலுக்கு பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலால், ஈரோடு மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு, நேற்று இரவு, 7:00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கிராமத்திற்கு செல்லும் வழித்தடங்களில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, உடுமலை சட்டசபை தொகுதி பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரிகள் வெளியில் காத்திருந்தனர். இரண்டு மணி நேரமாக, அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், இரவு, 9:00 மணிக்கு சென்றனர்.
பணம் எதுவும் கைப்பற்றவில்லை; ஆவணங்கள் மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

