ADDED : ஜூன் 04, 2024 01:16 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலத்தில், இரும்பு கர்டர் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் செலவில், 2.1 கி.மீ., நீளத்தில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடக்கிறது. இதில், 1.6 கி.மீ.,க்கு பாலம் கட்டுமான பணி, 100 சதவீதம் முடிந்தது.
மீதமுள்ள 500 மீட்டருக்கு துாண்கள் அமைத்த நிலையில், பாலத்தின் நடுவில் பொருத்த துாக்கு பாலம் வடிவமைத்தது மார்ச் 13ல் நகர்த்தப்பட்டு, தற்போது அதை பொருத்த வேண்டிய இடத்திற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மொத்தம், 500 மீட்டர் பகுதி பாலத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். 'ஜூலை இறுதிக்குள் கர்டர்கள், தண்டவாளங்கள் பொருத்தும் பணி முடிய வாய்ப்பு உள்ளது' என, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

