ADDED : ஜூலை 12, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ரத்தம் சிந்தி வளர்த்த கட்சி, படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். இரட்டை இலை ஏழு லோக்சபா தொகுதிகளில் 'டிபாசிட்' இழந்துள்ளது; 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், இரண்டு இடங்களில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.
தொடர்ந்து 10 தேர்தல்களில் அ.தி.மு.க., வீழ்ச்சி அடைந்ததற்கு பழனிசாமி தான் காரணம். இது தொடரக் கூடாது என்பதற்காக, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் இணைய வேண்டும் என, தொண்டர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். பொதுமக்கள் அபிப்ராயத்தை நாம் இழந்திருக்கிறோம்.
ஜெயகுமாருக்கு பதில் கூற தேவையில்லை. அவர் வாயில் நல்ல வார்த்தை வராது. கட்சி படுதோல்வியில் பாடம் கற்கவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது.
- பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர்

