பா.ஜ., கூட்டணி வேலுமணி கருத்துக்கு ஜெயகுமார் எதிர்ப்பு
பா.ஜ., கூட்டணி வேலுமணி கருத்துக்கு ஜெயகுமார் எதிர்ப்பு
ADDED : ஜூன் 07, 2024 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''முன்னாள் அமைச்சர் வேலுமணி, பா.ஜ., கூட்டணி குறித்து கூறியது, எங்கள் கட்சி நிலைப்பாடு கிடையாது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
இனி வருங்காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது. இதை மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தெளிவாக கூறி விட்டோம். முன்னாள் அமைச்சர் வேலுமணி அனுமான அடிப்படையில், பா.ஜ., கூட்டணி இருந்தால், அதிக சீட் வெற்றி பெற்றிருக்கலாம் என கூறி உள்ளார். இது எங்கள் கட்சி நிலைப்பாடு கிடையாது.
இலையும் தண்ணீரும் ஒரு நாளும் ஒட்டாது. அண்ணாமலை பா.ஜ., தலைவராக இருந்தாலும் இல்லை என்றாலும் இனி பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.