'அருந்ததியர் இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்க்கவில்லை!'
'அருந்ததியர் இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்க்கவில்லை!'
ADDED : ஆக 07, 2024 01:11 AM
அருந்ததியர் சமுதாயத்தின் பாதுகாவலர் என்றுமே அ.தி.மு.க.,தான்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை பலமாக எழுந்தபோது, தி.மு.க., கண்துடைப்பு ஆணையத்தை ஏற்படுத்தியது. அருந்ததியர் சமுதாய குழுக்கள் பலவற்றை கணக்கெடுப்பு செய்யாமல், அச்சமுதாய மக்கள் தொகையை குறைத்து கணக்கு காட்டி, 6 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக, வெறும் 3 சதவீத உள் ஒதுக்கீடு என கூறி, நாடகம் நடத்தப்பட்டது.
தி.மு.க., ஆதரவு வட்டத்தில் உள்ள சிலர், தங்கள் ஆதரவாளர்கள் வழியாக, அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை யாரும் அறியாதது கிடையாது. அ.தி.மு.க., 2011ல் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, 3 சதவீத இட உள் ஒதுக்கீடு வழக்கை திறம்பட நடத்தியது.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், இடைக்கால தீர்ப்பை பெற்றது அ.தி.மு.க., அரசுதான். தற்போது கிடைத்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, அ.தி.மு.க., அரசுதான் அடித்தளம் அமைத்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஜாதி வெறியர்கள் வெறியாட்டம், தமிழகம் முழுதும் கொல்லப்பட்ட அருந்ததியர் சமுதாய இளைஞர்கள், பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தனபால், அமைப்பு செயலர், அ.தி.மு.க.,