ADDED : பிப் 25, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆபரண தங்கம் விலை, கிராம் 8,000 ரூபாயையும், சவரன், 64,000 ரூபாயையும் தாண்டியுள்ளது.
இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் கிராம் தங்கத்துக்கு வழங்கப்படும் கடன், 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி, ஆறு மாதங்கள் வரையிலான கடனுக்கு 1 கிராமுக்கு, தங்கத்தின் மதிப்பில், 75 சதவீதம் வரையும்; ஓராண்டுக்கான கடனுக்கு கிராமுக்கு, 6,000 ரூபாயும் வழங்குமாறு, கூட்டுறவு துறை அறிவுறுத்திஉள்ளது.

