ADDED : ஏப் 20, 2024 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் அவரது மனைவி மம்தா ஜிவால் ஆகியோர், சென்னை பனையூரில், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஓட்டளித்தனர்.
அதேபோல, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், அவரது மனைவி ஷில்பம் கபூர், மகள் என்யா ஆகியோர், மயிலாப்பூர் தாச்சி அருணாச்சலம் தெருவில் உள்ள, புனித லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் ஓட்டளித்தனர்.
மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண், சென்னை நெற்குன்றம் எம்.ஆர்.மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் ஓட்டளித்தார்.

